Tuesday, October 4, 2011

தெரிந்து கொள்ளுங்கள்


அபாயப் பறவை
     நியூகினி நாட்டின் காட்டுப் பகுதிகளின் ‘ பீடோஹீம் ‘ என்ற பறவைகள் உள்ளன. இவைகளின் உடலில் கொடிய விஷம் உள்ளது. அதாவது நல்லப் பாம்பின் விஷத்தை விட இதன் உடலில் உள்ள விஷம் கடுமையானது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

தூக்கம்
     உலகில் அதிக நேரம் தூங்குபவர்கள் ஆப்பிரிக்கர்கள்.  உலகில் குறைந்த  நேரம் தூங்குபவர்கள் சீனர்கள்.

எண்ணெய் முழுக்கு நாள்

     ஞாயிறு      -   அழகு அகலும்
     திங்கள்       -   அதிக போருள்சேரும்
     செவ்வாய்    -   துன்பம் உண்டு
     புதன்         -   சிறந்த அறிவு
     வியாழன்     -   அறிவு கெடும்
     வெள்ளி      -    சேர்த்த பொருள் அழியும்
     சனி          -    செல்வம்  ஆயுள்வளர்ச்சி





கோடை நிழலுக்கு உதவும் மரங்கள்

1.       வேம்பு
2.       தூங்குமூஞ்சி
3.       புங்கம்
4.       பூவரசு
5.       மலைப்பூவரசு
6.       காட்டு அத்தி
7.       வாதாங் கொட்டை  மரம்
8.       மகிழம்


அழிந்துபோன தமிழ் மருத்துவ நூல்கள்

1.       அகத்தியர் பன்னிரு காண்டம்
2.       போகர் எண்ணாயிரம்
3.       கோரக்கர் மூலிகைப் பயம் – ஆயிரம்
4.       கொங்கனர்  - 3100
5.       மச்சமுனி   - ஏழுகாண்டம்
6.       கோரக்கர்   - வெண்பா 7000
7.       சிவவாக்கியம் – ஐந்துகாண்டம்
8.       காவியர்  வண்ணம்
9.       உரோமமுனி வடுசம்
10.   கிராமதேவர் சந்தப்பா
11.   நந்தீசர் சந்தம்
12.   சங்குமாமுனி கலித்துறை
13.   திருமூலர் திருமந்திரம் – 8000
14.   பதரூஉலி தழுகாண்டம்
15.   சட்டமுனி நிகண்டு
16.   சட்டமுனி – உரய





பெண்களின் பிரிவுகள்

       பேதை       - 5-7  வயது
      
       பெதும்மை   -  8-11 வயது


       மங்கை      -11-14 வயது

       மடந்தை     -14-19 வயது

       அறிவை     -20-25 வயது

       தெரிவை     -26-31 வயது

       பேரிளம் பெண் –32-40 வயது
      
       மூதாட்டி      -40-60 வயது

       கிழவி        -60க்கு மேல்

சொர்க்கத்திற்கு நுழைய முடியாத நபர்கள்
     
·         மோசடி செய்பவர்

·         கஞ்சர்கள்

·         கொடுத்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவர்கள்

·         மது அருந்துவோர்

·         வட்டி வாங்கிச் சாப்பிடுவோர்

·         அனாதையின் சொத்தை அபகரிப்போர்

·         பெற்றோருக்கு எதிராக நடப்போர்


நகரங்கள் அதன் அடைமொழிகள்


      தூத்துக்குடி – முத்துநகரம்
2.       தேனீ – இயற்கை விரும்பிகளின் பூமி
3.       மதுரை – கோயில் நகரம்
4.       காஞ்சீபுரம் – ஆலயநகரம்
5.       ஈரோடு – வாணிபமையம்
6.       தஞ்சை – தமிழக அரிசிக் கிண்ணம்
7.       திண்டுக்கல் – பூட்டுநகரம்
8.       திருச்சி – மலைக்கோட்டை நகரம்
9.       விருதுநகர் – தொழில் நகரம்
10.   நீலகிரி – மலைகளின் ராணி
11.   வேலூர் – கோட்டைகளின் நகரம்
12.   கோவை – தென்னகத்தின் மான்செஸ்டர்
13.   கரூர் – நெசவாளர்களின் வீடு
14.   திருநெல்வேலி – தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
15.   தருமபுரி – தொட்டப்பயிர் பூமி
16.   சேலம் – மாம்பழ நகரம்

Thursday, July 28, 2011

அறிய செய்திகள்

    • பிரேசில் நாட்டில் அணில் அளவுள்ள மிகக் சிறிய குரங்கு இனம் உள்ளது .
    • நிலத்தில் வாழும் பெரிய விலங்குகளில் ஒன்று காண்டாமிருகம் . இதன் மூக்கில் கொம்பு முளைத்திருப்பதைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம். அதனால் இந்த விலங்குகளை மூக்டுக்கொம்பன் என்றும் கூறுவர் .
    • சாதரணமாக ரோமங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். சிலருக்கு பழுப்பு நிறத்தில் காணப்படும். வயது அதிகமானால் வெள்ளை நிறமாக மாறும் .
    • கங்கை புனித நதியாகும். கங்கை கரையில் ஹரித்துவார் . காசி ஆகிய இந்துக்களின் முக்கிய புனித ஸ்தலங்கள் உள்ளன.
    • உலகுக்குப் பொதுவானது கிரீன்விச் நேரம். இங்கு வானவியல் ஆய்வுக்கூடம் கூட உள்ளது. இது தேம்ஸ் நதியின் தென்புறத்தில் லண்டனிலிருந்து சுமார் ௧௦ கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    • முதன் முதலில் திராட்சை கஸ்பியன் கடல் ஓரத்தில் மட்டுமே பயிரிடப்பட்டது . அங்கிருந்துதான் உலகின் மற்ற பாகங்களுக்கும் பரவியது. மிக வெப்ப நிலையுள்ள நாடுகளில் திராட்சை விளையும் .
    • இளம் வயதிலிருந்தே குளிர்ந்த நீரில் குளிக்கப் பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அதனால் நரம்பு பலம் பெரும். இரத்தத் ஓட்டமும் சிறப்பாக இருப்பதோடு உடலுக்கு சுறுசுறுப்பு ஏற்படும். வெந்நீரில் குழிந்து வந்தால் விரைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு விடும். 
    • முதன் முதலில் சோடா பானத்தை கண்டறிந்தது யார் தெரிமா? இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரிஷ்ட்லிஜோசப் என்பவர் .

Monday, June 20, 2011

தாய்மை

  
மானுட  பிறவியில்
என்னை
ஈன்றேடுத்த தெய்வம்  என் தாய் !
நீயின்றி
நானில்லை 
இவ்வுலகில் 
என்னை
அறிமுகப்படுத்தியவன் 
என் அன்னை ! 
அன்னை ஓர்
ஆலயம்  தான்
எனக்கு
கருவறையில்
என்னை
சுமந்ததால் !
காலங்கள் தோறும்
உன்னை
வணங்கி மகிழ்கின்றேன் .

Thursday, June 9, 2011

தெரிந்துகொள்ளுங்கள்

தங்கம் மஞ்சள் நிறமுள்ள ஓர் உலோகமாகும். இதன் அடர்த்தி 19.3. நீரைப் போன்று 19 மடங்கு எடையுள்ளது.ஆப்பிரிக்காவில் உள்ள சுரங்கத்தில் பெருமளவு தங்கம் வெட்டிஎடுக்கப்படுகிறது.

நியுசலாந்தில் கிவி என்ற ஒருவகை பறவை உள்ளது. பெண் பறவை முட்டையிடுவதோடு தன் பணியை முடித்துப் கொள்ளும். இந்த முட்டையை அடைகாத்து குஞ்சாகப் பொரிக்க வேண்டிய பொறுப்பு ஆண் பறவையைச் சார்ந்தது.

நவரத்தினங்கள்
1.       வைரம்
2.       மரகதம்
3.       நீலம்
4.       கோமேதகம்
5.       பவளம்
6.       மாணிக்கம்
7.       முத்து
8.       புஷ்பராகம்
9.       வைடூரியம்

Saturday, March 5, 2011

முயற்சி


முடிந்தவரை அல்ல

முடியும் வரை போராடு....

தோல்விகள் சாயும் வேரோடு...

வெற்றிகள் வரும் சீரோடு.....