Tuesday, October 4, 2011

தெரிந்து கொள்ளுங்கள்


அபாயப் பறவை
     நியூகினி நாட்டின் காட்டுப் பகுதிகளின் ‘ பீடோஹீம் ‘ என்ற பறவைகள் உள்ளன. இவைகளின் உடலில் கொடிய விஷம் உள்ளது. அதாவது நல்லப் பாம்பின் விஷத்தை விட இதன் உடலில் உள்ள விஷம் கடுமையானது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

தூக்கம்
     உலகில் அதிக நேரம் தூங்குபவர்கள் ஆப்பிரிக்கர்கள்.  உலகில் குறைந்த  நேரம் தூங்குபவர்கள் சீனர்கள்.

எண்ணெய் முழுக்கு நாள்

     ஞாயிறு      -   அழகு அகலும்
     திங்கள்       -   அதிக போருள்சேரும்
     செவ்வாய்    -   துன்பம் உண்டு
     புதன்         -   சிறந்த அறிவு
     வியாழன்     -   அறிவு கெடும்
     வெள்ளி      -    சேர்த்த பொருள் அழியும்
     சனி          -    செல்வம்  ஆயுள்வளர்ச்சி





கோடை நிழலுக்கு உதவும் மரங்கள்

1.       வேம்பு
2.       தூங்குமூஞ்சி
3.       புங்கம்
4.       பூவரசு
5.       மலைப்பூவரசு
6.       காட்டு அத்தி
7.       வாதாங் கொட்டை  மரம்
8.       மகிழம்


அழிந்துபோன தமிழ் மருத்துவ நூல்கள்

1.       அகத்தியர் பன்னிரு காண்டம்
2.       போகர் எண்ணாயிரம்
3.       கோரக்கர் மூலிகைப் பயம் – ஆயிரம்
4.       கொங்கனர்  - 3100
5.       மச்சமுனி   - ஏழுகாண்டம்
6.       கோரக்கர்   - வெண்பா 7000
7.       சிவவாக்கியம் – ஐந்துகாண்டம்
8.       காவியர்  வண்ணம்
9.       உரோமமுனி வடுசம்
10.   கிராமதேவர் சந்தப்பா
11.   நந்தீசர் சந்தம்
12.   சங்குமாமுனி கலித்துறை
13.   திருமூலர் திருமந்திரம் – 8000
14.   பதரூஉலி தழுகாண்டம்
15.   சட்டமுனி நிகண்டு
16.   சட்டமுனி – உரய





பெண்களின் பிரிவுகள்

       பேதை       - 5-7  வயது
      
       பெதும்மை   -  8-11 வயது


       மங்கை      -11-14 வயது

       மடந்தை     -14-19 வயது

       அறிவை     -20-25 வயது

       தெரிவை     -26-31 வயது

       பேரிளம் பெண் –32-40 வயது
      
       மூதாட்டி      -40-60 வயது

       கிழவி        -60க்கு மேல்

சொர்க்கத்திற்கு நுழைய முடியாத நபர்கள்
     
·         மோசடி செய்பவர்

·         கஞ்சர்கள்

·         கொடுத்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவர்கள்

·         மது அருந்துவோர்

·         வட்டி வாங்கிச் சாப்பிடுவோர்

·         அனாதையின் சொத்தை அபகரிப்போர்

·         பெற்றோருக்கு எதிராக நடப்போர்


நகரங்கள் அதன் அடைமொழிகள்


      தூத்துக்குடி – முத்துநகரம்
2.       தேனீ – இயற்கை விரும்பிகளின் பூமி
3.       மதுரை – கோயில் நகரம்
4.       காஞ்சீபுரம் – ஆலயநகரம்
5.       ஈரோடு – வாணிபமையம்
6.       தஞ்சை – தமிழக அரிசிக் கிண்ணம்
7.       திண்டுக்கல் – பூட்டுநகரம்
8.       திருச்சி – மலைக்கோட்டை நகரம்
9.       விருதுநகர் – தொழில் நகரம்
10.   நீலகிரி – மலைகளின் ராணி
11.   வேலூர் – கோட்டைகளின் நகரம்
12.   கோவை – தென்னகத்தின் மான்செஸ்டர்
13.   கரூர் – நெசவாளர்களின் வீடு
14.   திருநெல்வேலி – தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
15.   தருமபுரி – தொட்டப்பயிர் பூமி
16.   சேலம் – மாம்பழ நகரம்